நடிகர் பரத்

1. ‘555’ படத்தில் அதிரடி நாயகனாக நடிக்கும் பரத் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறாராம். படத்தில் பரத்துக்கு மேக்கப்பே வித்தியாசமாக இருக்கும் என்பதால்,, இதற்கென்று ஸ்பெஷலாக ஃபிரான்ஸிலிருந்து மேக்கப் கலைஞர்களை வரவழைத்திருக்கிறார்கள். ‘வானம்’ தன் நடிப்புக்கு ‘போதிமரம்’ ஆனதைத் தொடர்ந்து ரெண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிப்பது குறித்தும் புதிய முடிவெடுக்க இருக்கிறாராம் பரத்.

 

2. நடிகை திரிஷா இப்போது கன்னடப் பட வாய்ப்புகளைக் கேட்டுப் பெற ஆரம்பித்துவிட்டாராம். தமிழில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தால் வேறு என்னதான் செய்வார்? சமீபத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் கன்னடப் படம் ‘புல் புல்’. அங்கே வளர்ந்துவரும் தர்ஷன்தான் இவருக்கு ஜோடி.

 

3. ‘அவன் இவன்’ படத்தை முடித்தபின் பிரபுதேவாவின் படத்தை 80./. முடித்துவிட்ட விஷால், டைரக்டர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாராம். இந்தப் படம் இயக்குனருக்கும், விஷாலுக்கும் விருது வாங்கித் தரும் படமாக அமையும் என்ற செய்தி இப்போதே யூனிட்டில் உலா வரத் தொடங்கிவிட்டதாம். பின்னே? தனுஷ் மட்டும்தான் விருது வாங்குவாரா என்ன?

 

4. சாஃப்ட்வேர் எஞ்சினீயராக ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘எதிரி எண்-3’ படம் அவருக்கு வித்தியாசமான அடையாளம் தருமாம். ராம்குமார் இயக்கும் இப்படத்தில் நிழல் உலக தாதாவாக பிரபுவும் , பூனம்பாஜ்வா கதாநாயகியகியாகவும் நடிக்கிறார்கள்.

 

5. ஹாங்காங் திரும்பத் திரும்ப இழுக்குதாம். ‘ரௌத்ரம்’ படத்தில் நடிப்பதற்காக ஹாங்காங் சென்று வந்த ஸ்ரேயாவால், ஹாங்காங்கை மறக்க இயலவில்லையாம். இதனால், மறுபடி ஒறுமுறை தன் சொந்த செலவில் ஹாங்காங் சென்று வந்தாராம்.

 

6. “எங்கேயும் காதல்” படத்தின் பாடகர் அர்ஜுன் ஒருமுறை ஹாரிஸ் ஜெயராஜைச் சந்தித்து கிடார் வாசித்துக் காட்டவே கிடைத்த சான்ஸ்தான் “எங்கேயும் காதல்” பட வாய்ப்பாம். பட வாய்ப்புக்கு முன் அர்ஜுன் சாஃப்ட்வேர் இஞ்சினியராகப் பணியாற்றிக்கொண்டே இசைக்குழுவிலும் பாடிக்கொண்டிருந்தாராம்.

 

7. சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன்’ படத்தில் இன்னொரு நாயகனாக ஜெய் நடிக்கிறாராம்.

 

8. திருமணத்துக்குப் பிறகு ஒதுங்கியிருந்த மீனா,ராம்சரண் தேஜா நடிக்கும் தெலுங்குப் படத்தில் மாமியாராக நடிக்கிறாராம்.

 

9. நடன இயக்குனர்கள் பலரும் நடிகர்களாகவோ, இயக்குனர்களாகவோ அவதாரம் எடுக்கும் நிலையில் காயத்ரி ரகுராம் நடிகையாக அறிமுகமாகி நடன இயக்குனர் ஆனவர்.

 

10. இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனின் அஸோஸியேட்டாக இருந்து அவரது ‘போட்டோன்கதாஸ்’ தயாரிப்பிலேயே ‘வெப்பம் ‘ படத்தில் டைரக்டராக அறிமுகமாகிறாராம் , அஞ்சனா.

 

11. ‘யுத்தம் செய்’ படத்தைப் பார்த்த ரஜினி ”தான் பார்த்த நல்ல படங்கள்ல இதுவும் ஒண்ணுன்னு” பாராட்டினாராம். கூடவே சேரனின் நடிப்பையும் பாராட்டினாராம்.

 

12. ஐரோப்பாவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்தி நடிகர் கபீர் பேடி, இப்ப வசந்தபாலன் டைரக்ட் பண்ற ‘அரவன்’ பத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

Advertisements