கீதா நமக்கு அனுப்பி வைத்த பயணக் கட்டுரை போட்டிக் கட்டுரை இது…

 

காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர் பயணக் கட்டுரை

 

kashmir- காஷ்மீர்

kashmir- காஷ்மீர்

 

 

லீவு விட்டாச்சு; விட்டாச்சு!’ என்று கும்மாளமிட்டபடி குதித்துக்கொண்டு வந்த எங்களை எங்க தாத்தா சென்னைக்கு அழைத்துப் போனார். எங்களைன்னா நாங்க யாருன்னு தெரியணுமா? என் பெயர் கீதா. என் தங்கையின் பெயர் ப்ரியா. பாண்டிச்சேரியில் படிக்கும் நாங்க லீவைக் கொண்டாட எங்க தாத்தா வீட்டுக்கு சென்னைக்குப் பயணமானோம். எங்க தாத்தா ஒரு வழக்கறிஞர் என்பதால், மே மாதம் கோடை விடுமுறை விட்டுடுவாங்க. எனவே ஏப்ரலில் உள்ள கொஞ்ச நாட்களை சென்னையிலேயே கழித்தோம். சென்னையில் சுற்றிப் பார்க்க இடமா, இல்ல? மெரினா என்ன; நீலாங்கரை என்ன; ஸ்கேட்டிங் என்னன்னு ஒரே அமளிப்படுத்தினோம் . முன்கூட்டியே காஷ்மீர் திட்டத்தைப் போட்டு வைத்திருந்த என் தாத்து-பாட்டி (தாத்தாவைத் ‘தாத்தூ’ என்று அழைப்போம்) ஃப்ளைட் டிக்கெட்டெல்லாம் ரிஸர்வ் பண்ணி ரெடியா யிருந்தாங்க டெல்லிவரை ஃப்ளைட்டிலும் அதற்குமேல் ரயிலிலும் பயணித்தோம். ரயில் பயணம் எனக்கும் என் தங்கைக்கும் பிடிக்கும். கொட்டமடிக்க கேட்கவா வேணும். 5ம் வகுப்பு முடித்த எனக்கும், யூ.கே.ஜி. படிக்கும் என் தங்கைக்கும் விளையாட ரயிலில் ஒரு ஹிந்திக்காரக் குடும்பத்தின் ஒரு வாலு என் தங்கை வயதில் கிடைக்கவும் ஜம்மு வந்ததுகூட தெரியாத அளவு கும்மாளம்தான். அந்த குட்டிப் பையனின் தந்தை அவன் பாலைக் கொட்டியதற்காக முதுகில் நாலு சாத்தவும் என் பாட்டிக்கு வந்ததே கோபம் . அவுங்களுக்கு சின்னக் குழந்தைகளை யாராவது அடிச்சா அறவே பிடிக்காது. ஹிந்தியும் அவுங்களுக்குத் தெரியாதா? அந்தப் பையனோட அப்பாவை தமிழிலேயே ஒரு பிடி பிடிச்சாங்க. ” எதுக்கு பச்சப் பிள்ளையை இப்படி அடிக்கிறீங்க? நீங்க ஒருநாளும் பாலைக் கொட்டினதில்லையா? சுத்த மோசமால்ல இருக்கு!” என்று படபடன்னு திட்டவும் ஹிந்திக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. என் தாத்துவிடம் ” க்யா போல்தீ ஹை?”ன்னு கேட்டார்.( தாத்துக்கு ஹிந்தி à
®¤à¯†à®°à®¿à®¯à¯à®®à¯) தாத்து “ஏன் குழந்தையை அடிக்கிறிங்கன்னு கேட்கிறாங்க”.ன்னு சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் பாட்டி விடாமல் “குழந்தையை அடிககிறதையெல்லாம் விட்டுடுங்க” என்று பேசிக்கொண்டே இருக்கவும் ஹிந்திக்காரர் கொஞ்சம் தடுமாறிப் போனார். நானும் என் தங்கையும் விழுந்து விழுந்து சிரித்தோம் . அதைப் பார்த்த எங்க ஹிந்தித் தோழன் அழுகையை நிறுத்திவிட்டு அவனும் சிரிக்க ஆரம்பித்தான், ஏதும் புரியாவிட்டாலும். என் தங்கை ப்ரியாயோ ஹிந்திக்காரரிடம் தமிழ் பேசும் என்பாட்டியின் வாயைப் பொத்தினாள். ஏதோ ஹிந்திக்காரரிடம் தமிழ் பேசுவது கொலைக் குற்றம் போல” ஐய்யோ; பேசாதே” என்று பதறவும், எனக்கு மேலும், மேலும் அடக்க முடியாத சிரிப்பு. ஒரு வழியாக ஜம்முவில் இறங்கி நைட் தங்கிவிட்டு அடுத்தநாள் ஸ்ரீநகர் நோக்கி ஒரு வாடகைக் காரில் பயணமானோம். ஜம்முவின் வெப்பம் எங்களை அங்கு தங்கவிடவில்லை. ‘மானசரோவர் ஏரி’யும்கூட கடும் வெய்யிலில் காய்ந்து கிடப்பதாக டிரைவர் சொன்னதை வைத்துக்கொண்டு ஸ்ரீநகர் செல்வதே எங்கள் திட்டமானது. மாலை ஸ்ரீநகர் சென்றடைந்த அங்கு இரவு தங்கிவிட்டு மறுநாள் காஷ்மீரின் அழகுக் குவியலான ‘குல்மார்க்’ புறப்பட்டோம் காலை 9 மணியளவில் புறப்பட்ட நாங்கள் அழகால பனி மலைகளை கண்டு களித்தவாறே நண்பகல் 12.00 மணியளவில் ‘குல்மார்கை’ சென்றடைந்தோம். நடுவில் ஆங்காங்கே போட்டோ எடுத்துக்கொள்ளவும் தவறவில்லை. குதிரைச் சவாரியும் பனிச்சறுக்கும்தான் குல்மார்க்கின் ஸ்பெஷல்ஸ். என்னுடைய பாட்டி, குதிரை சவாரிக்கு வர மறுத்துவிடவே நாங்களும் ‘குதிரை பிழைத்துப் போகட்டும்’ என்று பாட்டியை கட்டாயப்படுத்தவில்லை. நானும், ப்ரியாயும், தாத்துவும் குதிரைகளைத் தேர்ந்தெடுத்து மலைகளின்மேல் குதிரையில் பயணித்தோம். குதிரைக்
காரன் துணையின்றி சவாரிக்கு எங்களை ரெடி பண்ணிக்கொண்டோம். எங்களுக்கு அது மிகவும் த்ரில்லாக இருந்தது மட்டுமல்ல; நானும் என் தங்கையும் எப்போதுமே அட்வென்சரை விரும்புவோம். தாத்துவும் எங்களோட சரிக்கு சரியா துணை வரும் ஒரு விளையாட்டுத் தோழன். தாத்துவோட கலகலப்பான நேச்சரும் காமெடி சுபாவமும் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். தாத்து ஒரு விளையாட்டுத் தோழன் கட்டுமில்லாமல், எங்களுக்குத் தேவையான அனைத்தையும் கவனிக்கும் ஒரு தாய் மாதிரி. குளிப்பாட்டுவது, சாதம் ஊட்டுவது, பொட்டு வைப்பது என எங்களுடைய எல்லா தேவைகளையும் கவனிப்பாங்க. தாத்துவோட உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொள்ள ஜல்ஜல்லென்று சவாரியைத் தொடர்ந்தோம். மலைகளின் மேடு பள்ளங்களில் குதிரையின்மீது குதித்து குதித்துப் பயணித்தது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. 1 மணி நேரம் இப்படியாக பயணம் செய்த பிறகு , எங்களுடைய சவாரி, ஒரு சறுக்கு வண்டியில் பனிமலையின் மேல் தொடர ஆரம்பித்தது. அந்த வண்டியில் எங்களை அமர வைத்து பனிமலையின் மீது இழுத்துக்கொண்டு போயினர். தைரியத்தில் என் தங்கையும்கூட சளைத்தவளல்ல. மற்றவர்கள் பயப்பட்ட அந்தப் பனிமலை பயணத்தை அவளும் என்னையும், தாத்துவையும்போல வெகு ஜாலியாக சந்தோஷப்பட்டுக்கொண்டாள். சிரித்தோம்; க்ரீச்சிட்டுக் கத்தினோம். எங்கள் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பனிக்கூட்டத்துக்கு நடுவே ஜில்லிட்டுப்போனது. கடும் குளிரைத் தாங்கும்வண்ணம் எங்களுடைய (கீழே வாடகைக்குத் தருகிறார்கள்) ஆடை இருந்தது.

இப்படியாக 45 நிமிடத்துக்கு மேல் பயணித்த நாங்கள் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சறுக்க ஆரம்பித்தோம். கொஞ்சம் பயம்…கொஞ்சம் திகில் நிறைய த்ரில்லிங், கொண்டாட்டம் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்தோம். இப்படியாகப் பனிப் பிரதேசம் முடிந்து, குதிரை சவாரி மூலம் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தோம். நினைவாற்றல் உள்ள காலம் வரை எங்களால் குஷி தரும் குல்மார்க்கை மறக்க முடியாது. அங்கேயே பனிமலைமீது ஒரு இன்ஸ்டண்ட் போட்டோகிராஃபர் எடுத்த போட்டோக்களைக் கொண்டுவந்து கீழே வெய்ட் பண்ணிக்கொண்டிருந்த பாட்டியிடம் காட்டி குஷியும் கும்மாளமுமாக எங்கள் அனுபவங்களை விவரித்தோம், போட்டோக்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் பாட்டி. பின்னர், அதே சந்தோஷத்தோடு, ஸ்ரீநகர் திரும்பினோம்.” லாட்ஜில் தங்கவேண்டாம்; படகு வீட்டில்தான் தங்கணும்” என்ற எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம். எங்கள் டிரைவர் ‘தல் லேக்’ சாலைக்கு அழைத்துச் சென்றார். தல் லேக் மிக மிகப் பெரிய ஏரி மட்டுமல்ல; மிகவும் அழகானதும்கூட. நூற்றுக் கணக்கான போட் ஹௌஸஸ் நிரம்பியிருந்தது அந்த ஏரியின் மீது.! என் தங்கை ப்ரியா ஒரு படகு வீட்டைக் காட்டி அதற்குப் போகலாம் என்றாள். கலர்ஃபுல்லாக பெய்ண்ட் செய்யப்பட்டு வண்ண விளக்குகளாலும், சீரியல் லைட்டுகளாலும் அலங்கரித்திருப்பார்கள். கண்ணைக் கவரும்வண்ணம் இருந்த ஒரு வீட்டை சுட்டிக்காட்டித்தான் ப்ரியா கேட்டாள். ரோட்டு முனையிலிருந்து படகு வீடு வரை ஒரு போட்டில் எங்களை அழைத்துப் போய் காட்டினார்கள். அது ஒரு முழுமை பெற்ற வீடு என்றால் அது மிகையாகாது. பெட் ரூம், அட்டாச்டு டாய்லெட், ட்ராயிங் ரூம் பால்கனி என்று அத்தனை வசதிகளும்கொண்ட அந்த போட் ஹௌஸின் அழகில் நாங்கள் எங்களை மறந்தோம். “தாத்து’ தாத்து” என்று நாங்கள் தாத்துவை பிராண்ட ஆரம்பித்தோம். தாத்துவும் சிரித்à®
¤à¯à®•à¯à®•à¯Šà®£à¯à®Ÿà¯‡ ஒரு படகு வீட்டை எங்களுக்காக புக் பண்ணினார்கள். குதித்தபடி படகு வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடினோம். அடுத்தநாள் அவுட்டிங்கை அவாய்ட் பண்ணிட்டு படகு வீட்டிலேயே தங்க முடிவு செய்தோம். கலை 8.00 மணிக்கெல்லாம் தயாராகி வெளியே வந்து பால்கனியில் அமர்ந்துகொண்டோம். அமர்ந்ததுதான் தாமதம். காஷ்மீரி ட்ரெஸ்ஸில் எங்களை போட்டோ எடுக்க போட்டோகிராஃபர்கள் எங்களை அணுகினர். அழகான காஷ்மீரி ட்ரெஸ்ஸில் என்னையும் ப்ரியாயையும் அலங்கரித்து பலவித போஸ்களில் போட்டோ எடுத்தனர். பால்கனியில் அமர்ந்தால் என்னென்ன காட்சிகள் தெரியுமா? சுற்றிப் பரந்த நீல நிற ஏரிப் பரப்பு, அதில் படகில் மிதந்து வரும் வென்டர்ஸ்..அழகான் ஐமிடேஷன் நகை விற்பனை, தின்பண்டங்கள் விற்பனை , குங்குமப்பூ விற்பனை, இன்னும் பலவித விற்பனை படகுகளைப் பார்க்கலாம். பால்கனியில் உட்காருவதே ஜாலியான அனுபவம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்ச நேரத்திலேயே ஒரு ‘ஷிக்காரா ரைடு ‘க்குத் தயாரானோம். ‘சிக்காரா ரைட்’ என்பது அந்த ஏரியின் அந்தக் கோடிவரை ஒரு அலங்கரிக்கப்பட்ட படகில் சென்று வரலாம். 2மணி நேர சவாரி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படகில் குஷன் பொருத்தி சோபா போல வைத்திருப்பார்கள். சிலர் படுத்து ரெஸ்ட் எடுப்பதும் உண்டு.

 

 

எங்கள் காஷ்மீர் பயணத்தில் எதைச் சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. இந்த ‘ ஷிக்காரா ரைட் ‘ டும் எங்களை மகிழ்வுறச் செய்த ஒன்று. இங்கும் இடையிடையே பூங்காக்கள், ரெஸ்டாரெண்ட்ஸ், மின் விசைப் படகு சவாரி, கடைகள் என்று ஏகப்பட்டது இருக்கும். அங்கங்கே நிறுத்துவார்கள். காஷ்மீர் ஷாப்பிங்கை இங்கேயே முடிச்சுக்கலாம்போல அத்தனை காஷ்மீர் பொருட்களும் நியாய விலையில் கிடைக்கும். காஷ்மீர் வுட்ஸ் -மர வேலைப்பாடுகொண்ட கைவினைப் பொருட்கள், ட்ரெஸ மெட்டீரியல்ஸ், பரிசுப் பொருட்கள் , உல்லன் பொருட்கள் என்று கண்ணையும் கருத்தையும் கவரும் ஷாப்பிங்கை இந்த ‘ஷிக்காரா’விலேயே முடிச்சுக்கலாம். திரும்ப போட்-ஹௌஸுக்கு வந்து அங்கு இரவு உறங்கும் சந்தோஷத்தில் திளைத்தோம். ‘நான் இந்த பெட்; நான் இந்த பெட்’ என்று நானும் ப்ரியாயும் போட்டிபோட்டு படுத்துக்கொண்டோம் தாத்துவுக்கும் பாட்டிக்கும்கூட கொள்ளை சந்தோஷம். சந்தோஷம் அவுங்களுக்கா இல்ல, எங்க சந்தோஷத்தைப் பார்க்கும் சந்தோஷமான்னு தெரியவில்லை. இப்படியாக அன்றைய பொழுது முடிந்தது. அடுத்த நாள்’ சோனா மார்க்’ புறப்பட்டோம். போகிற வழியெல்லாம் வண்ணப் பூக்கள் என்ன; பனி மலைகள் என்ன: வண்ணப்பூந்தோட்டங்கள் என்ன ; மலையருவிகள் என்ன; எல்லாமே அழகில் தோய்த்துப் போட்டமாதிரி தோன்றும் . சென்னையில் கட்டடங்களைத் தவிர வேறெதையும் பார்க்கமுடியாததால், இயற்கைக் காட்சிகளை வியந்து, ரசித்தவாறே’ சோனாமார்க் ‘ வந்தடைந்தோம் . இதுவும் ‘குல்மார்க்’ போலவே, மலைகள் சூழ்ந்த இடம். பனிமலைக்குள்ளே செல்ல குதிரைகள் தயார் நிலையில் இருந்தன. இம்முறை பாட்டியை வரச் சொல்லி கம்பெல் பண்ணினோம். குதிரைக்காரர்களும் சும்மா விடமாட்டர்கள். அவர்களும் ‘ மாதாஜி, மாதஜி’ என்று பிடிவாதமாகக் கூப்பிடவே இம்முறை என் பாட்டியும் வருவதற்கு ஒத்துக்கொண்டார். ஒத்துக்கொண்டாரே யொழிய, அவுங்களுக்கு ஒà®
ே பயம். குதிரைக்காரர்கள் விடாமல் கூடவே வருவதாக சத்தியம் செய்யாத குறையாக அடித்துப் பேசி பாட்டியை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். பனிமலைக்கான கோட்டு-சூட்டு சகிதம் பாட்டியை இரண்டுபேர் பிடித்து குதிரையில் ஏற்றினார்கள். குதிரைக்காரன் பாட்டியைப் பிடிச்சிருக்கானா இல்ல பாட்டி குதிரைக்காரனைப் பிடிச்சிருக்காங்களான்னு புருபடாமல் இருந்தது. பாட்டி யின் முகம் பயத்தில் உறைந்து கிடந்தது. நாங்க கோட்டு-சூட்டு சகிதமாக குதிரைமீது பாட்டியைப் பார்த்து ஒரேயடியாக சிரிக்க ஆரம்பித்தோம். பாட்டியின் பயத்தைப் பேர்த்த தாத்து”இங்க பார் குட்டிப் பசங்க எப்படி தனியா குதிரையில் உட்கார்ந்திருக்காங்க!. ப்ரியாகூட குதிரைக்காரன் பிடிக்கவேண்டாமுன்னு சொல்றா(ன்) பாரு.(எங்கள் இருவரையும் போடா, வாடா, அவன், இவன் என்று செல்லமாக அழைப்பார்கள்). எப்படி தனியா உட்கார்ந்திருக்கா(ன்)” என்று தைரியம் ஊட்டினார்கள். பாட்டி எதற்கும் செவிசாய்க்காமல், குதிரைக்காரனை கெட்டியாபிடிச்சுட்டாங்க. குதிரைக்காரர்களுக்கும் பாட்டியைப் பார்த்து ஒரே சிரிப்பு. குதிரைப் பயணம் ஆரம்பமாயிற்று. குதிரை பள்ளத்தில் இறங்குவதும் பின்னர் மேட்டில் தாவி ஏறுவதும் எங்களுக்கு த்ரில்லாக இருந்தது; பாட்டிக்கு திகிலாக இருந்தது. அடிக்கடி கண்களை இறுக்க மூடிக்கொண்டார்கள். ” ஆ; அம்மா!” என்றெல்லம் கத்தல் வேறு. நன்றாகப் பிடிக்கும்படி சொல்லி குதிரைக்காரனுக்கு கிள்ளு’ அடி என்றெல்லாம் கொடுத்தபடி வந்தார். அவை எல்லாவற்றையும் ஜாலியாக எடுத்துக்கொண்ட குதிரைவாலாக்களோ “மாஜி; மாஜி” என்று சிரித்தபடியே வந்தார்கள். 15;20 நிமிடம் கழித்து பனிமலை ஆரம்பமானது. பாட்டியின் குதிரை போஸை போட்டோ எடுக்கலாம் என்று நினைத்த தாத்து, குதிரைக்காரனை பாட்டியை விட்டு
தள்ளிப் போகும்படி சொன்னார்கள். உடனே பாட்டி அவர்களை (இரண்டு பக்கமும் இரண்டு பேர்) கெட்டியாகப் பிடிக்க முயல அவர்கள் ஓடிப் போய் கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டார்கள். 2,3 போஸ்கள் பாட்டியை குதிரையுடன் போட்டோ எடுத்த பிறகு அருகில் வந்த குதிரைக்காரனை விட்டு விட்டுப் போனதற்காக பாட்டி தலையில் ஓங்கி ஒரு அடி போட்டாரே பார்க்கலாம். நானும் ப்ரியாயும், தாத்துவும், மற்ற குதிரைக்காரர்களும் விழுந்து விழுந்து சிரிக்க அடி வாங்கிய குதிரைக்காரர் ‘ங்கே’ என்று அடிபட்ட இடத்தை தடவிக்கொண்டே சமாளித்து சிர்த்தார். அதைப் பார்த்த எங்களுக்கு இன்னும் சிரிப்பு. ஒருவழியாக அந்த இடத்தில் பாட்டியை இறக்கிவிட்டு வெய்ட் பண்ண வைத்துவிட்டு, நாங்கள் தள்ளு வண்டியில் பனிமலை நோக்கிப் பயணமானோம். ‘குல்மார்க்’ மாதிரியே மலை உச்சிக்கு அழைத்துச் சென்று பிறகு இறக்குகிறார்கள். பாட்டி வந்திருந்தாலும் சுவாசிக்க சிரமப்பட்டிருப்பார் என்று கூறினார்கள். அங்கிருந்து 40 கி.மீ. தூரம் ஏறிச் சென்றால், அமர்நாத் குகைக் கோவில் வருமாம். அங்குள்ள சிவலிங்கம் பனியினால் ஆனதாம். நாங்களும் தாத்துவும்தான் எதற்கும் ரெடியாச்சே! ஆனால், இப்போது ஸீஸன் இல்லையாம். அதனால், வழியை மூடிவிட்டிருந்தார்கள். செப்டெம்பர் முதல் டிஸம்பர்-ஜனவரி வரைதான் ஸீஸனாம். எனவே நாங்கள் திரும்பினோம். பனிமலையிலிருந்து சறுக்கிகொண்டு இறங்குவதுதான் மிகவும் த்ரில்லாக இருக்கும். எங்க ப்ரியாக்குட்டி எல்லாவற்றிலும் துளி பயமின்றி அல்லது பயமிருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் இருந்தது ஒரு வியப்பு.

படகு சவாரி

பனிமலைகளின் அழகை ரசித்தவாறே கீழே வந்து பாட்டியையும் கூட்டிக்கொண்டு மீண்டும் குதிரை சவாரி செய்து அடிவாரத்தை அடைந்தோம். குதிரைக்காரர்களுக்கு பாட்டி 100ரூபாய் டிப்ஸ்(அடி!?) வேறு கொடுத்தார். ‘சோனாமார்க்’கிலிருந்து ஸ்ரீநகர் திரும்பி, படகு வீட்டுக்கு வந்தோம். படகு வீட்டை ஒருநாள் மட்டும் புக் பண்ணியிருந்த நாங்கள் அங்கு தங்கப்போகும் 7 நாட்களுக்கும் புக் பண்ணிவிட்டோம். எனக்கும் ப்ரியாக்கும் ஹோட்டல் ரோமைவிட படகு வீடே பிடித்துப்போனது. ஒருவீட்டின் அட்மாஸ்பியரோட சுற்றிலும் தண்ணீர் சூழ பல்கனியில் உட்கார்ந்து ஏரியின் அழகில் லயிப்பது ஹோட்டல் ரோமில் வருமா? படகு வீட்டிலேயே காஃபி, டீ, ஸ்நேக்ஸ், முத்லியவற்றை படகு வீட்டு ஓனரே அரேஞ்ச் பண்ணுவர் ஆர்டர் பண்ணினால் சாப்பாடுகூட ரெடி பண்ணித் தருவார்கள். ஆனால், நாங்கள் தங்கியிருந்த படகுவீடு ரோட்டைப் பார்க்கும்படி 2 நிமிட படகு சவாரியில் போய்விடும்படி இருந்ததால் நாங்களே போய் சாப்பிட்டுவிட்டு வருவோம். சாப்பாட்டைப்பற்றி இங்கு சொல்லியாக வேண்டும். காஷ்மீர்க்காரர்களும் அரிசிச்சோறு சாப்பிடுகிறார்கள். சாதம் கிடைக்கிறது. பக்கத்து கிராமங்களிலிருந்து பாசுமதி அரிசி வருகிற்து.’ சௌத் இண்டியன்’ ஹோட்டல்களும் அங்கங்கே இருக்கின்றன . அவைகள் எங்கே இருக்கின்றன என்று தெரிந்து வைத்துக்கொண்டோமானல், நம்மூர் சாப்பாடே கிடைச்சுடும். எனவே சாப்பாட்டுப் பிரச்சினையும் எங்களுக்கு ஏற்படவில்லை. இந்தப் படகு வீடுகள் நாள் ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ. 2500வரை கிடைக்கும். இவைகள் ரோட்டிலிருந்து எவ்வளவு தூரம் என்பதைப் பொறுத்து வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. ரொம்ப உள்ளே தள்ளி இருந்தால் ரோட்டைப் பிடிக்க கொஞ்சம் அதிக நேரம் படகு சவாரி தேவைப்படும். எங்கள் பயணத்தின் அடுத்தநாள் ‘பெஹல்காம்’ என்ற இடத்துக்குப் புறப்பட்டோம். எல்லா இடங்களுமே காலை 8,9 மணிà
µà®¾à®•à¯à®•à®¿à®²à¯ புறப்பட்டால், போய்ச் செருவதற்குள் நண்பகல் ஆகிவிடும். ‘ பெஹல்காமு’ம் மலை மீது குதிரை சவாரிதான். இம்முறை பாட்டி ஜாக்கிரதை உணர்வு பெற்றவராக குதிரை சவாரிக்கு வர மறுத்துவிட்டார். ஒரு மணி நேரமாயிற்று உள்ளே செல்ல. மலைக்குள்ளே சுனைகளும் நீர் வீழ்ச்சிகளும் இருந்தன. பார்க்கவே சிலாகித்துப் போனோம். அருவியில் நீராடினோம். பனிமலைகளையும் ரசித்தவாறே திரும்ப ஆரம்பித்தோம். திரும்பி வந்தால் பாட்டிக்கு ஊரிலிருந்து போன் வந்திருந்தது. ‘காஷ்மிரில் நில நடுக்கம். கடையடைப்பு’ என்று நம்ம ஊர் டி.வி.க்களில் கீழே நியூஸ் ஓடுதாம். பதறிக்கொண்டு 2,3, இடத்திலிருந்து போன். சிக்னல் இல்லாததால் உறவினைகளுக்கு ரொம்ப நேரம் போன் வேறு கிடைக்கலியாம். நாங்க இருந்த இடத்தில் நிலநடுக்கம் மாதிரி எதுவும் தெரியாததால், அக்கம்பக்கம் விசாரித்ததிலும் ஏதும் தெரியவில்லை. ‘கடையடைப்பு’ எதிர்கட்சித் தலைவர் ‘கிலானி’ங்குறவர் கடையடைப்பு’க்கு கால் கொடுத்திருக்கிறாராம். ஆனாலும் ஓரிரு கடைகளைத் தவிர பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லையாம். கடையடைப்பானால், குழந்தைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவோமோ என்று உறவினர்களுக்குக் கவலை ‘அப்படி ஏதுமில்லை’ என்றதும், எல்லோருக்கும் நிம்மதி, ஏற்கெனவே நாங்கள் ‘காஷ்மீர்’ வந்திருப்பது எல்லோருக்கும் ‘திக் திக்’குன்னு எப்ப திரும்புவோம்முன்னு இருக்காம். ஆனால், சரியாச் சொல்லணும்னா இங்கு தவழும் அமைதி நம்ம ஊர்ப்பக்கம் கிடையாது. ‘சட்டம்-ஒழுங்கு’ அப்படி இப்படின்னு கட்சிகள் மாறி மாறி சொல்லிக்கொள்கிறார்களே உண்மையான சட்டம் ஒழுங்கை அங்குதான் பார்க்கலாம். 2,3 தெரு/வீதிகளுக்கு ஒரு இடத்தில் ஒரு மிலிடர்ய் கேம்ப் ஆஃபீஸ் இருக்கும். போலீஸ் ஸ்டேஷங்களைத் தவிர இப்படிப்பட்ட ராணுவ அà®
®à¯ˆà®ªà¯à®ªà¯à®•à®³à¯ எல்லையிலிருப்பதுபோலவே ஊருக்குள்ளும் உண்டு. எதிர்பாராமல் ஏற்படும் அவசர நிலைகளை சமாளிக்க என்று சொல்கிறார்கள். இந்த மிலிடரி கேம்புகளை எடுக்கச் சொல்வது எதிர்கட்சித்தலைவரின் பல டிமாண்டுகளில் ஒன்றாம். ‘போலீஸ் ஸ்டேஷன் இருக்கும்போது இது எதற்கு?’என்பது அவருடைய கேள்வியாம். ‘காஷ்மீர் தனி நாடாக வேண்டும்’ என்பதும் மற்றுமொரு டிமாண்டாம். ‘பெஹல்காமி’லிருந்து திரும்பிய நாங்கள் அன்று இரவு ரெஸ்ட் எடுத்துவிட்டு, அடுத்தநாள் ‘யூஸுமார்க்’ என்ற இடத்துக்குப் புறப்பட்டோம். இதுவும் ‘குல்மார்க்’; சோனாமார்க்’ ‘பெஹல்காம்’ போலவேதான். வழக்கமான குதிரை சவாரி இங்கும் உண்டு. குதிரைகளில் ஏறி மலைப் பகுதியின் உள்ளே சென்ற எங்களை அருவிகளும், நீர்வீழ்ச்சிகளும் சுனைகளும் வரவேற்றன. நீர்வீழ்ச்சியில் நீராடினோம். அங்கு ‘தூத் கங்கா’ என்று ஒரு அருவி இருக்கிறது, அதிலிருந்து முன்பொருகாலத்தில் பால் வருமாம். அந்த பால்-நீரில் செத்த பிணத்தைக் கொண்டுவந்து போட்டால் அது உயிர் பெற்று எழுந்துவிடுமாம். இப்படிக் கூறுகிறார்கள் இந்தக்கூற்றை பெரும்பாலனோர் நம்பாமல் போகலாம்.

காஷ்மீர்

வெள்ளை வெளேர் என்று முன்னொரு காலத்தில் தண்ணீர் கொட்டியிருக்கலாம். காலப்போக்கில் மலைகளில் நிகழும் தட்ப வெப்ப மாற்றங்களாலும், மலைமீது பரந்து வளர்ந்துள்ள மூலிகைகளாலும் மாற்றமடைந்திருக்கலாம். ‘பிணம் உயிர் பெறும்’ என்றது அந்த் தண்ணீரின் மருத்துவ குணத்தை மேம்படுத்திக் கூறப்படுவதாக இருக்கலாம். எனவே எதிலுமே அர்த்தம் இல்லாமல் இல்லை. ‘தூத் கங்கா’ நீரைப் பருகிவிட்டுப் புறப்பட்டோம். இந்த ‘குல்மார்க்’, ‘சோனாமார்க்’ , ‘பெஹல்காம்’, யூசுமார்க்’ ஆகிய நான்கு இடங்களும் காஷ்மீர்-ஸ்ரீநகரின் நாலு திசைகளிலும் அமைந்துள்ளனவாம். பிரிடிஷாரால் ஒவ்வொரு இடமாகக் கண்டுபிடிக்கப்பட்டு உல்லாசப்பயணிகளுக்காக போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறதாம். ‘சட்டம்-ஒழுங்கு’ பற்றிக் குறிப்பிட்டோம். நாங்கள் போகிற- வருகிற வழிகளிலெல்லாம் காஷ்மீரத்துப் பெண்கள், விறகு சுமந்துகொண்டு செல்வார்கள். ஆடு- மாடு மேய்ப்பார்கள். ஆளரவமற்ற அந்த இடங்களில் ஒண்டியாளாய் பயமின்றி, அவர்கள் நடமாடுவதைக் காண முடிந்தது. ஒரு சில இடங்களில் ஆண்களும்கூட நடமாய்க்கொண்டிருந்தாலும் இந்தப் பெண்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆண்கள் அவர்கள் வேலையைப் பார்த்துக்கோண்டு போகிறார்களே தவிர பெண்களை மெனக்கெட்டு திரும்பிப் பார்ப்பதுகூட கிடையாது. ‘சட்டம்-ஒழுங்கு’ என்பதன் உண்மையான அர்த்தத்தை இங்குதான் காண முடியும். ந்ம்மூரில் எல்லாம் மேடைப்பேச்சுக்கு உபயோகித்துக்கொள்ளும் அலங்கார வார்த்தைகள் மட்டுமே. அன்றாடம் வரும் சேனல்-நியூஸையும், பேப்பர் நியூஸையும்பாருங்கள். நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குத் தெரியவில்லை. எனவே பிரச்சினையெல்லாம் காஷ்மீர் எல்லையில்தானாம். ஊருக்குள்ளே எதுவும் கிடையாதாம். அதுவும் உல்லாசப் பயணிகளுக்கு எவ்வித தொல்லையும் கிடையாதாம். இந்த நான்கு இடங்களைà®
¤à¯ தவிர சிட்டிக்குள் அமைந்துள்ள ‘மொகல் கார்டன்’, ‘ ஷாலிமார் கார்டன்’ சென்று வந்தோம். விரிந்து பரந்த கார்டன்களின் பிரம்மாண்டமும், வண்ணப் பூக்களின் அணிவகுப்பும் கண்கொள்ளாக் காட்சிகள்! பூக்களில் இல்லாத வண்ணங்களே கிடையாது. ஆங்காங்கே நீர்நிலைகளும் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. கார்டன்களைத் தவிர , பிரசித்தி பெற்ற ‘சிவன்’ கோவிலுக்கும் ‘ ‘கீர் பவானி’ கோவிலுக்கும் சென்று வந்தோம். 108 படிகளைக் கொண்ட சிவன் கோவில் படிக்கட்டுகளில் ப்ரியா தாத்துவைத் தூக்கச் சொல்லாமல் அவளே ஏறினாள். ஆங்காங்கே கொஞ்சம் நின்றாள். அவ்வளவுதான். நாங்கள் இதற்காக அவளை வெகுவாகப் பாராட்டினோம். ப்ரியாயும்கூட ஊரிலிருந்து ‘அப்பு; அம்மு’ ( எங்க அப்பாவும் அம்மாவும்) போன் பண்ணியபோது பெருமையாகச் சொல்லிக் கொண்டாள். சிவனையும் அம்மனையும் தரிசித்தோம். ‘கீர் பவானி கோவிலில் நுழைந்ததுமே பாயசம் தருகிறார்கள். அதனால்தான் ‘கீர்’ என்ற பெயர் போலும்!. இவை தவிர ‘ஜும்மா மஸ்ஜித்’துக்கும் சென்றோம். மதப் பாகுபாடு ஏதுமின்றி, அனைவரும் செல்லலாம். ஆண்களுக்கு அணிந்துகொள்ள குல்லா தருகிறார்கள். பெண்கள் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். இப்படியாக மசூதி தொழுகையையும் முடித்துக்கொண்டோம். காஷ்மீர் கடைகளில் நம்மூரில் காண முடியாத விதவிதமான இனிப்புகள் கிடைக்கும் சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும்.

 

பயணம் முடியும் தறுவாய்க்கு வந்துவிட்டதை உணர்ந்த நானும் ப்ரியாயும் கவலைப்பட ஆரம்பித்தோம். நாங்களும் பல இடங்களுக்குப் போய் வந்தவர்கள்தான் . ஏற்காடு, கொடைக்கானல், மேட்டுர், ஆழியார் டேம் என்று உள்ளூர் டூர்களைப் பார்த்த நாங்கள், அந்தமான், ஷிம்லா, குல்லு மணாலி, ரத்தாங்க் பாஸ், என்றெல்லாம் போயிருக்கிறோம். ஆனால் எங்கு சென்றாலும் திரும்ப சென்னை வந்தால் ஏற்படும் ஒரு திருப்தி வேறெதிலும் ஏற்பட்டதில்லை. ‘சொர்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?’ என்ற பாட்டைப் பாடிக்கொண்டு சென்னை வந்து விழும் ஜாதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். இந்த கொளுத்துகிற வெய்யிலும், சுகாதாரமற்ற தெருக்களும் நம்மை வரவேற்றாலும் ‘நம்மூரைப் போல வருமா?’ தான், நம்ம ஆத்ம ஸ்ருதி. ஆனால், இம்முறை ஸ்ருதி பேதம் ஏற்பட்டதுபோல் இருந்தது. சென்னையிலிருந்து மே மாதம் 9ம் தேதி புறப்பட்ட நாங்கள், அம்மாதம் 20ம் தேதிதான் திரும்ப வந்தோம். மொத்தம் 12 நாட்களில், பயண நாட்களை அங்குமிங்குமாக தள்ளிவிட்டுப் பார்த்தால், 9 ஃபுல் டேய்ஸ் அதாவது 9 நாட்கள் முழுதாக காஷ்மீரில் கழித்த எங்களுக்கு திரும்பி வர மனமில்லை என்றால், காஷ்மீரின் அழகை என்னவென்று வர்ணிப்பது? வருத்தமாக உட்கார்ந்த எங்களை பாட்டியும், தாத்துவும் ,” அடுத்த மே மாத லீவுக்கும் இங்கேயே வந்தா சரியாப் போச்சு!” என்று தேற்றியதுமட்டுமில்லை. அவர்களுக்கும் கவலையாகத்தான் இருந்ததாம்.’, ஷாப்பிங் வேலை ஒன்று இன்னும் பாக்கியிருக்கிறது. போகலாமா?’ என்ற தாத்துவிடம்,”தாத்து, தாத்து! இன்னொரு முறை’ ஷிக்காரா ரைட்’ போய் அப்படியே ஷாப்பிங்க் பண்ணிடலாம். “ஷிக்காராவும் ஆச்சு. ஷாப்பிங்கும் ஆச்சு” என்றதும் ஆமோதித்த தாத்துவிடம்” போனமுறை பகலில் போனோமா, இந்தத் தடவை இருள்சூழத் தொடங்கும் மாலையில் போகலாம். சூப்பரா இருக்கும்” என்றதையும் ஒத்துக்கொண்ட தாத்து ‘ஷிக்காரா’ படகுக்காரரை சரியாக மாà
²à¯ˆ 6.00 மணிக்கு வரச் சொன்னார்கள்.

காஷ்மீர்

ஆஹா…! ‘தல் ‘ஏரி மாலை விளக்கொளியில் என்னமாய் ஜொலிக்கிற்து, தெரியுமா? ‘காணக் கண் கோடி வேண்டும்’ என்பது அனுபவத்தில் சொன்ன வார்த்தைகள். வெகு உல்லாசமாக சென்றது எங்கள் மலை நேர ‘ஷிக்காரா’ சவாரி. இருள் கவியக் கவிய அழகும் கூடிக்கொண்டே போனது. வழியில் வந்த ரெஸ்டாரெண்டில் படகை நிறுத்தி வெங்காய பக்கோடாவையும் டீயையும் ருசி பார்த்தபின்பு பயணத்தைத் தொடர்ந்தோம். “தாத்து, அப்புக்கும், அம்முக்கும் ‘கிஃப்ட்’ வாங்கிட்டுப் போகணும்” என்று நானும் ப்ரியாயும் சொன்னதையும் ஆமோதித்த தாத்து ” நல்ல குழந்தைகள்” என்று எங்களைப் பாராட்டவும் செய்தார்கள். ஷாப்பிங்க் ஏரியாவில் படகு நின்றதும் அம்முக்கு ஒரு காஷ்மீரி – வுட்ஸில் செய்யப்பட்ட நகைப் பெட்டி ஒன்றும் அப்புக்கு ஒரு டீ ஷர்ட்டும், வாங்கியதோடு நில்லாமல், என்னுடைய ஃப்ரெண்ஸுக்கு, பென்ஸில் பாக்ஸும்,, கம்மல் பாக்ஸும் வாங்கினேன். ப்ரியா அவளுடைய ஃப்ரெண்ட்ஸுக்கு கீ செயின்ஸும் வாங்கினாள். இப்படியாக ஷாப்பிங்கை முடித்துவிட்டு இரவுநேர ‘ஷிக்காரா ரைடை’ எஞ்சாய் பண்ணிக்கொண்டே போட் ஹௌஸ் வந்து சேர்ந்தோம். காஷ்மீரில் பார்க்க நினைத்து பார்க்காமல் விட்டது, ‘லடாக்’க்கும் ‘ கார்கிலு’ம்தான் . லடாக்கும் கார்கிலும் சென்றுவர ஒருவாரம் தேவைப்படுமாம். அதி உச்சியில் இருக்கும் ‘லடாக்’, அதற்கும் மேல் ‘ லே’ அதற்கும் மேல் ‘கார்கில்’. முதலில் இந்த இடங்களின் குளிரைத் தாங்கமுடியணும். சிலருக்கு லடாக்கிலேயே செயற்கை சுவாசம் தேவைபடுமாம்.’ கார்கில்’தான் உலகின் ரெண்டாவது குளிர் பிரதேசமாம். இங்குதான் நம் வீரர்கள் நாட்டைக் காக்கும் புனிதப் பணியை செய்து வருகிறார்கள். எங்கள் சுற்றுப் பயணத்தில் நாங்கள் கண்ட காட்சிகளில் எங்கள் நினைவில் நின்றவைகளை சொல்ல வேண்டுமானால், நமது படை வீரர்களின் அணிவகுப்பு ஆங்காங்கே நடந்தவண்ணம் இருக்கும். மலை உச்சிகளில் நம்மால் கற்பனை செய்ய à®®à¯
டியாத உயரங்களில் நம் ராணுவ வீரர்கள் அனாயாசமாக ஏறிப் போய்க்கொண்டிருப்பார்கள். ஆங்காங்கே ராணுவ வீரர்களின் பேரேட் நடந்து கொண்டிருக்கும். அங்கெல்லாம் நாம் வண்டியை நிறுத்தாமல் போக வேண்டுமாம். எங்களுக்குத் தெரியாமல், ஒரு பேரேட் நடக்கும் இடத்தில் நிறுத்தி இறங்கினோம். ‘என்ன’ என்பது போல் ஓரிரு வீரர்கள் ஓடி வந்தனர் “ஒன்றுமில்லை. இந்தக் குட்டிப் பாப்பா உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்க விரும்புறா” என்று தாத்து சொன்னாங்க “நாட் பர்மிட்டட்” என்று மறுத்துவிட்டார்கள்.” உங்க சீஃப் கமேன்டரைப் பார்த்துக் கேட்கலாமா?” என்ற தாத்துவின் கேள்விக்கு “நான் அவருக்கு அடுத்த ரேங்கில் உள்ளவன்தான். இங்கு அதெல்லாம் கட்டாயமாக தடை செய்யப்பட்டவை” என்று கூறி ப்ரியாயின் கன்னத்தில் தட்டிக்கொடுத்து ‘ஸாரி’ என்பதுபோல் தலையாட்டினார்கள். விடைபெற்றோம். மலைப் பள்ளத்தாக்குகளில் வெள்ளைக்காரர்கள் போல் இருக்கும் காஷ்மீர்ப் பெண்கள் 10 கி.மீ. க்குமேல் தலையில் காட்டில் வெட்டியெடுத்த விறகுக் கட்டைகளைச் சுமந்து செலவதும் காணத்தக்க காட்சியாக இருக்கும். சில காஷ்மீர்ப் பெண்கள் கம்பளித் தொழிலை நம்பி ஆடு மேய்த்துக்கொண்டிருப்பதையும் காணலாம். இன்னும் ஆங்காங்கே ஓடும் ‘ஜீலம் நதியும், மேலிருந்து பேரிரைச்சலோடு கொட்டும் நீர்வீழ்ச்சிகளும் ” எங்களைப் பார்க்க திரும்பவும் வருவீர்களா?” என்று நம்மிடம் கேட்கும். பூக்கள், நதிகள் , ஏரிகள், மலைகள், பனிச்சறுக்கல்கள் என்று அனைவரிடமும் பிரியா விடைபெற்று காஷ்மீரைவிட்டுப் புறப்பட்டோம். காஷ்மீர் ஒரு பூலோக சொர்கம்!

Advertisements