1. மத்திய அமைச்சரின் ஜெகத்ரட்சகனின் கல்வி நிறுவனங்களில் முக்கிய பங்காற்றும் ரஞ்சித் என்பவர் தயாரிக்கும் ஒரு படத்தில் சீமான் கதாநாயகனாக நடிக்கிறார்.

Sonakshi

2. சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்தது. இப்போது பாலிவுட்டின் வித்யா பாலனை நடிக்க வைக்க ஆலோசிக்கிறார்களாம்.

ஷ்ரயா சரன்

3. ஸ்டண்ட் மாஸ்டர் ‘பெப்ஸி’ விஜயன் இயக்கத்தில் அவர் மகன் சபரீஷ் கதாயகனாக நடிக்கும் ‘மார்கண்டேயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்த சல்மான்கான் மேடையில் தன் அருகில் அமர்ந்திருந்த ஸ்ரேயாவிடம் விடாமல் பேசிக்கொண்டே இருந்தார். அடுத்த படத்தின் நாயகியாகிறாரோ?
4. ‘இந்தியா’ படப்பிடிப்பில் ஊதிய உயர்வு கேட்டு, பிரச்சினை செய்த தொழிலாளர்கள் படம் பிடிக்கப்பட்டிருந்த ஃபில்ம் ரோல்களைத் தூக்கிக்கோண்டு வந்துவிட்டார்களாம். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புஹார் செய்திருந்தாராம், படத் தயாரிப்பாளரான ஜாக்குவார் தங்கம். ‘எப்படி எங்கமேல புஹார் செய்யலாம்?’ என எகிறிக் குதிக்கிறதாம், பெப்ஸி.
5. கூலி உயர்வு ,அதிரடியாகக் கேட்பவர்களிடம் கடுமை காட்டவேண்டிய தலைவர் ரொம்ப சாஃப்டா இருக்காராம். தன் மகனின் ‘ஆயுதம்’ படப்பிடிப்புக்கு ஏதாவது பிரச்சினை வரலாம் என்பதால்தான் இந்த சாஃப்டு என்று குற்றம் சாட்டுகிறார்களாம், படாதிபதிகள்.
பகலவன் + விஜய்

பகலவன் + விஜய்

6. நடிகர் விஜய் நடிக்கும் ‘பகலவன்’ பட வேலைகள் மறுபடியும் தள்ளிப் போகுதாம். முன்பு எழுதிய வசனங்களை இப்ப மாத்தணுமாம். இல்லன்னா இப்பத்திய அரசுக்கு வசைபாடுவதுபோல் இருக்குமாம்.
7. தங்கர்பச்சான், பிரபு தேவாவையும், நயந்தராவையும் சேர்த்து ஒரு படத்தில் நடிக்கவைக்க முயற்சி செய்தாரம். ஆனால், ‘அப்புறம் பார்க்கலாம் , என்று நழுவி ஓடிவிட்டாராம், பிரபுதேவா.

asin

8. அசின், இந்திப்பட உலகில் மார்க்கெட் இழந்துவிட்டார் என்றும், கைவசம் ஒரேஒரு படம்தான் இருக்கிறது என்றும் பரவிய வதந்தியைத் தொடர்ந்து ‘என்ன விஷயம்?’ என்று அசினிடம் கேட்டால், “நான் ஒரு தென்னிந்திய நடிகை என்பதால், இப்படியெல்லாம் கிளப்பி விடுகிறார்கள். இந்தியில் நான் நடித்த கஜினி, 3 இடியட்ஸ், தபாங், ரெடி ஆகிய 4 இந்திப் படங்கள் வெளியாகி 100கோடி ரூபாய்க்குமேல் வசூலில் சாதனை படைத்திருக்கின்றன. மேலும் ஷாகித்கான் டைரக்ஷனில், அக்ஷய் குமார் ஜோடியாக ‘ஹவுஸ்புல்’படத்திலும், ரோஹித் ரெட்டி டைரக்ஷனில்,அபிஷேக் பச்சன் ஜோடியாக,ஒரு புதிய படத்திலும் நடிக்க இருக்கிறேன். மொத்தத்தில் இந்திப் பட உலகில் நான் ஒரு வெற்றிகரமான கதாநாயகியாகியாகவே இருந்து வருகிறேன்.
Advertisements