குபேர ஜாதகம்

 

 

1. தொட்டது துலங்கும் யோகம்:-

ஒருவருடைய ஜாதகத்தில் லெட்சுமி யோகம் இருந்தால் அவர்கள் லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரராகவோ இளமையிலேயே மாறக்கூடிய வாய்ப்பு இருக்கும். லக்னாதிபதி ஆட்சி அல்லது உச்சத்தில் இருக்கவேண்டும். ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியும்,ஆட்சி அல்லது உச்சம் பெற்று தனாதிபதியுடன் இணைந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் லட்சுமி யோகம் செயல்படும். லட்சுமி 2. கடாட்சமும் கிட்டும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்கை பட்டதெல்லாம் வளரும்.

2. வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்க:-
கன்னையாகுமரி அம்மனைத் திருமணம் செய்வதற்காக தாணுமாலையன் வந்துகொண்டிருக்கிறார். இந்த திருமணத்தை விடிவதற்குள் முடிக்கவேண்டும் என்பது விதியாம். ஆனால் தாணுமாலையன் வழுக்கம்பாறறை என்ற இடத்திற்கு வருவதற்குள் கோழி கூவிவிட்டது. எனவே தாணுமாலையன் சிசீந்திரம் என்ற இடத்திற்கு திரும்பி வந்துவிட்டார். எனவே கன்னியாகுமரி அம்மன் இன்னும் கன்னியாகவே இருக்கின்றாள். கோழி கூவித் திருவிளையாடல் நடத்தி, விடியலைத் தெரிவித்த இடம் வழுக்கம்பாறை. எனவே வழுக்கம்பாறைக்கு வந்து அங்கிருந்து கன்னியாகுமரி அம்மனையும் வழிபட்டு அதன்பிறகு 3. தாணுமாலையனையும் வந்து சுசீந்திரத்தில் தரிசித்துச் சென்றால், வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்கும்.

3. நினவாற்றலை வளர்க்கும் தோப்புக்கரணம்:-
பிள்ளையாரை தோப்புக் கரணம் போட்டு வித்தியாசமான முறையில் வணங்குவோம். வலது கையால், இடது காதையும், இடது கையால் வலது காதையும், தொட்டு இழுக்கும்போதும், கால்களைப் பிணைத்து அமர்ந்து , அமர்ந்து எழுந்திருக்கும்பொழுதும், மூட்டுகளுக்கும் மூளைக்கும் பலம் கிடைக்கிறது. இதை ஒரு நல்ல உடற்பயிற்சி
யாகவும் கருதலாம். தலைக்கு மேல் செல்லும் ரத்தத்தை ‘பம்ப்’ செய்து கொடுக்கிறது. மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதால், புத்தி விழித்துக்கொள்கிறது. நினைவாற்றல் நமக்கு கிடைக்கிறது. எனவே தோப்புக்கரணம் போடும் பிள்ளைகள் படிக்கும் பாடத்தை நினைவில் வைத்திருப்பர். நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும் பெறுவர்.

4. சிம்மாசன யோகம் யாருக்கு?:-
ஒருவருடைய சுய ஜாதகத்தில் சுக ஸ்தானாதிபதியும் , தொழில் ஸ்தானாதிபதியும் , பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் அல்லது இருவரும் இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், சிம்மாசன யோகம் அவர்களுக்கு ஏற்படும். மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாகவும் ,மாபெறும் தலைவர்களாக வரும் வாய்ப்பும் அவர்களுக்கு உண்டு.

5. வெற்றி தரும் விஜயாபதி:-
மகரிஷிகளில் மிகப் பெரிய மகானான விசுவாமித்திரர்,கட்டிய திருக்கோவில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ளது. அங்குள்ள இறைவனின் பெயர் விஸ்வநாதர். அம்மனின் பெயர் அகிலாண்டேஸ்வரி. “விஜயம்” என்றால் வெற்றி என்று பொருள். விஜயாபதிக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கலாம்.

Advertisements