ஜூலை மாத ராசி பலன்

ஜூலை மாத ராசி பலன்

1. மேஷம்:-

உங்கள் ராசிக்கு 9, 12க்குரிய குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். கேது இரண்டாமிடத்திலும், ராகு எட்டாமிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். சனி பகவான் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கிறார். இனி மாதக் கிரக சஞ்சாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மன தைரியம் மேலோங்கும். வெளியூரில் வேலை செய்யும் சிலருக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இரண்டாமிடத்து சுக்கிரன் மூலம் சிலருக்கு எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மாத பிற்பகுதியில் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. கொஞ்சம் விரயச் செலவுகளும் ஏற்படும். சிலருக்கு கண் சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும். வீட்டில் உறவினர் வருகை அதிகமாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைத்துவிடும். எதிர்பார்த்த கடனுதவியும் கிடல்க்கும். சொல்வாக்கு, செல்வாக்கு, அதிகாரம், கௌரவம் கிடைக்கும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். கணவன்- மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு முழுவதும் ஜென்ம குருவின் சஞ்சாரத்தால், மனக் கிலேசமும், ஏதாவதொரு சஞ்சலமும் இருந்தவண்ணம் இருக்கும். ராகு , கேது சஞ்சாரமும் சரியில்லை என்பதால், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது, நல்லது. சனியின் ஆறாமிடத்து சஞ்சாரம் மிகவும் நல்லது. ஆனால், சனி கொடுக்கும் பலன்களை முழுவதுமாக அடையவிடாமல் தடுப்பது, குரு,ராகு, கேது முதலிய கிரக சஞ்சாரங்களே. ஆனால், மாதக் கிரக சஞ்சாரங்களின் மூலம் நற்பலன்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. வியாழக் கிழமைதோறும், குரு பகவானுக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் ராகு கேதுக்களுக்கும் வழிபாடு செய்யவும்.

2. ரிஷபம்:-
மாதத்தின் முற்பகுதியில் விரயச் செலவுகள் ஏற்பட்டாலும்கூட மாதத்தின் பிற்பகுதியில் தேவையில்லாத செலவினங்கள் குறையும். வருமானம் பெருகும். இதுவரை உங்களை வாட்டிவந்த உடல்நலக் குறைவு நீங்கி, உடல் ஆரோக்கியம் அடையும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தன விருத்தி ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ்நிலை காணப்படும். இருப்பினும் அலைச்சல் உண்டு. பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய நண்பர்கள் வந்து சேருவார்கள். அவர்களால் உங்களுக்கு சில நன்மைகள் ஏற்படும். அதிகாரிகளாலும், எதிரிகளாலும் தொல்லைகள் ஏற்படலாமோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு புத்திரப் பேறு ஏற்படும். புத்திர, புத்திரிகள் மேன்மையடைவர். மற்றபடி பொதுவாக உங்கள் ராசிக்கு குரு பனிரண்டாமிடத்தில் சஞ்சரிப்பதும், கேது ஜென்மத்தில் சஞ்சரிப்பதும் , சனி ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதும் அவ்வளவு நல்லதல்ல. குருவின் பனிரண்டாமிட்த்து சஞ்சாரம் செலவினங்களை அதிகமாக்கும். தொழிலில் உழைப்பு அதிகமாகவும் ஊதியம் குறைவாகவும் இருக்கும். பண விரயம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். மேலும், ராகுவும், கேதுவும் உடலுக்கும், மனதுக்கும் பலவிதமான தொல்லைகளைக் கொடுப்பார்கள். எதிரிகளால், தொல்லைகளும் காரியத் தடைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி உறவு பாதிப்பும், மேலதிகாரிகளின் விரோதமும் உண்டாகும். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சனியின் ஐந்தாமிட சஞ்சாரம், பூர்வ புண்ணிய சொத்துக்களில் வில்லங்கத்தை ஏற்படுத்தும். பூர்வீக சொத்தை விற்கவேண்டி வரும். புத்திரர்களைப் பிரிய நேரலாம். நீதிமன்றத் தீர்ப்புகளில் சாதகத்தை எதிர்பார்க்க முடியாது. ஆண்டுக் கிரகங்களின் பொதுப் பலன்கள் சாதகமாக இல்லாத நிலையிலும், மாதக் கிரகங்களின் சஞ்சாரம் மேற் குறிப்பிட்ட நற்பலன்களை வழங்கும்.

3. மிதுனம்:-
ஆண்டுக் கிரகங்களான, குரு பதினோராமிடத்தில் சஞ்சரிப்பது மிகவும் நல்லதாகும். தொழிலில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பு, பதவி உயர்வு முதலியவை கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். பழைய கடன்கள் அடைபடும். ராகுவின் சஞ்சாரத்தால் சில விரயச் செலவுகள் ஏற்படலாம். ஆனால் பதினோராமிடத்து குருவால், ராகுவினால் ஏற்படும் கெடு பலன்கள் வெகுவாகக் குறைந்துவிடும் வாய்ப்புண்டு. சனியின் நாலாமிடத்து சஞ்சாரம் குடும்பத்தைவிட்டுப் பிரியும் சூழ்நிலையை ஏற்படுத்தும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றாலும்கூட, தாமதமாகலாம். ஆனால், எல்லாவற்றையும் சரிக்கட்டும் நிலையில் குருவின் சஞ்சாரம் இருக்கும். ஆனால், மாதக் கிரகங்களின் சஞ்சாரம் சகல சுகங்களையும் இந்த ஜூலை மாதம் கொடுக்கும். நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல உறக்கமென்று நல்லபடியாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். சுபச் செலவுகள் குடும்பத்தில் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு எதிரிகளால் அவமானம் ஏவ்ற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும் மொத்தத்தில் இம்மாதம் ஒரு நல்ல மாதமாகவே இருக்கும்.

4, கடகம்:-
இப்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான நிலை அல்ல. சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்லதே. இப்போது ராகு பகவானால், சில தொல்லைகள் இருக்கும்.. கேதுவின் சஞ்சாரம் ஒருவகையில் சாதகமாகவே உள்ளது. இந்த நிலைமைகளையும் மாதக் கிரகங்களின் சஞ்சாரத்தையும் வைத்துப் பார்க்கும்போது, தேவைக்கேற்ற பண வரவு இருந்துகொண்டுதான் இருக்கும். சொல்வாக்கு, செல்வாக்கு, கௌரவம் மேன்மை அடையும். சிலருக்கு பூமி லாபம் ஏற்படும். புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலர் சொந்த ஊரைவிட்டோ, சொந்த இடத்தைவிட்டோ வெளியேறவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள். மனதில் ஏதோ ஒரு சோகம் இருந்துகொண்டு இருக்கும். சில தீய நண்பர்களால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே எவரிடமும் கொஞ்சம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. தேவைக்க்ற்ற பணவரவு இருந்தாலும், விரயச் செலவுகள் அதிகமாகும். வாகனங்களாலும் விரயச் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்.

5. சிம்மம்:-
குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு மிக நல்ல பலன்களாக நடக்கும். சனியின் சஞ்சாரமும், ராகுவின் சஞ்சாரமும் அவ்வளவு நல்லதல்ல. கேதுவினால் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும். இந்த குரு பகவான் உங்களுக்கு மற்ற கிரகங்களினால் ஏற்படும் தீய பலன்களையும்கூட அடித்து வீழ்த்தி விடுவார். இனி மதக் கிரகங்களின் பலன்களை ஆராயுமிடத்து, தொழில், வியாபாரம் மேன்மை அடையும். எதிபார்த்த வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. மனோபலம் அதிகரிக்கும். சகோதர உதவியும் உண்டு. மேலும் சகோதரர்கள் மேன்மை அடைவர். பெண்களால் நன்மை உண்டு. வாழ்க்கைத் துணை நலம் பெறுவர். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு திருமணம் கூடிவரும். வேலை வாய்ப்பு கிடைக்கும் யோகமும் ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் சில நன்மைகளும் ஏற்படும். எதிரிகளும் போட்டியாளர்களும் இருந்த இடம் தெரியாமல் ஓடி மரைவார்கள்.சிலருக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கும்..வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிலர் தற்போது சொந்த ஊருக்குத் திரும்பி வருவார்கள்.

6. கன்னி:-
உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் குரு சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. அதுபோல ராகுவின் சஞ்சாரம் நன்றாக இருந்தபோதும், கேதுவின் சஞ்சாரத்தை திருப்தியாகச் சொல்ல முடியாது. சனிபகவான் உங்கள் ராசியிலேயே ஜென்ம சனியாக சஞ்சரிப்பதையும் சிறப்பில்லை என்றுதான் கூற வேண்டும். இப்படியாக ஆண்டுக் கிரகங்கள் சரியாக இல்லை என்றாலும் மாதக் கிரகங்களின் சஞ்சாரப்படி இந்த மாதம் உங்களுக்கு ஓரளவுக்கு நற்பலன்களாகவே நிகழும். தொழில் ,வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். நாகரீகமான பொருட்களை வாங்கி அனுபவிக்கும் யோகம் உண்டாகும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடையும் பாக்கியம் ஏற்படும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் சில நண்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பல வகையிலும் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சிலருக்கு சுப காரியங்கள் நிகழும். சிலருக்கு வாகனச் சேர்க்கை ஏற்படும். சிலர் நிலம், வீடு,மனை வாங்கும் வாய்ப்பினைப் பெறவார்கள். பெண்களால் நன்மை ஏற்படும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலர் பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்பினை பெறுவார்கள். இந்த மாதம் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புண்டு. இருப்பினும் உடல் நலத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். விரயச் செலவுகள் ஏற்படும். செய்யக்கூடிய காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும்கூட கொஞ்சம் அவமானமும், நாணயக் குறைவும் ஏற்படும்.

7. துலாம்:-
குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதனால், நற்பலன்களுக்கு குறைவிருக்காது. ராகு, கேதுக்களின் சஞ்சாரமும் சனி பகவான் விரயச் சனியாகச் சஞ்சரிப்பதும் அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி பகவான் ப்னிரண்டாமிடமான கன்னியில் சஞ்சரிப்பதன் காரணமாக பல தொல்லைகளும், தடைகளும் தாமதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. ராஜயோகாதிபதி 12ல் மறையக்கூடாது. ஆனாலும் மாதக் கிரகங்களின் சஞ்சாரத்தால் இந்த மாதம் உங்களுக்கு சென்ற மாதம் இருந்த பாதிப்புகளிலிருந்து கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் புதிய ஆடைகள் வாங்குவர். சிலருக்கு ஆபரணங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தொழில் வியாபாரம் மேன்மை அடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான சூழ்நிலை நிலவும். சகல சம்பத்துக்களையும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் அனைவரும் இப்பொது ஒழிந்து போவார்கள். இருப்பினும் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அவருக்கு வயிறு கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பயணங்களின்போது கவனத்துடன் இருக்காவிட்டால், சிறுசிறு விபத்துகள் ஏற்படும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அத்தனையிலும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். அதற்கான பலனும் கிடைக்கப் பெறுவீர்கள்

8. விருச்சிகம்:-
குரு பகவானின் ஆறாமிடத்து சஞ்சாரம் உங்களுக்கு நல்லதல்ல. ராகு,கேதுக்களின் சஞ்சாரமும் நற்பலன்களைக் கொடுக்க வாய்ப்பில்லை. சனிபகவானின் பதினோராமிடத்து சஞ்சாரம் மட்டும் நற்பலன்களைத் தரவல்லது. மற்ற கிரகங்களால் வரக்கூடிய கெடு பலன்களையும் சரிசெய்யவல்லது. இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரத்தால், இந்த மாதம் உங்களுக்கு கொஞ்சம் சோதனை நிறைந்த மாதமாக இருக்கிறது. ஆகவே கொஞ்சம் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருப்பது நல்லது.மனைவியின் உடல் நலம் பாதிக்கப்படலாம். மருத்துவச் செலவுகள் அதிகமாகும், கண், வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். சில சமயங்களில் நண்பர்கள்கூட பகைவர்களாகும் வாய்ப்புகள் உண்டு. எனவே நண்பர்களிடம் கவனமாக நடந்துகொள்வது நல்லது. விரயச் செலவுகள் அதிகமாகும். அலைச்சல்கள் அதிகமாகும். அதன் காரணமாக சரியாக தூக்கம் இல்லாமல் போகும். கணவன்-மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இருப்பினும் அவை உடனுக்குடன் சரியாகிவிடும்., பயணங்களின்போது கவனத்துடன் இருப்பது நல்லது. சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. எடுக்கும் முயற்சிகள் செய்யும் காரியங்கள் அத்தனையிலும் தடங்கல்களும், இடையூறுகளும், காலதாமதங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. உற்றார் உறவினர்களுடன் விரோதங்கள் ஏற்படலாம். எனவே இறைவனை வணங்கி இந்த மாதத்தை இனிய மாதமாக்கிக்கொள்ளுங்கள்.

9.தனுசு:-

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கிறார். இது மிகவும் சிறப்பானதாகும். அதேபோல ராகு,கேதுக்களின் சஞ்சாரமும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. ஆனால், சனிபகவான் கர்மச் சனியாக உங்கள் ராசிக்கு பத்தாமிடமான கன்னியில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பற்ற நிலை . ஆனால் ஐந்தில் சஞ்சரிக்கும் குருவின் சஞ்சாரமும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு விழுவதாலும் சனியின் பாதிப்பு உங்களுக்கு அதிகம் இருக்காது என்று நம்பலாம். இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரங்களின்படி இந்த மாதம் உங்களுக்கு தொழில் வியபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதன் காரணமாக கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. கணவன்-மனைவியரிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும்கூட அது நீடிக்காது. எடுத்த காரியங்கள் மற்றும் செய்யும் முயற்சிகள் அத்த்னையிலும் உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றியே அடைவீர்கள். சகல செல்வாக்கினையும் சௌபாக்கியங்களையும் அனுபவிப்பதற்கான யோகம் உண்டு. புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பலவழிகளிலிருந்தும் நன்மைகள் வந்துகொண்டிருக்கும். இருப்பினும் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதன் காரணமாக உங்களுக்கு மனதில் ஒரு சோகம் இருந்துகொண்டெ இருக்கும். பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு மார்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மேலதிகாரிகள், பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரும். அவர்களுடைய விரோதம் வந்து சேரும். பழைய கடன்களில் சில அடைபடும்.

10. மகரம்:-

குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. அதுபோல 11மிடத்திலுள்ள ராகு பகவான் சில நன்மைகளைச் செய்தாலும்கூட 5மிடத்திலுள்ள கேதுவினால் உங்களுக்கு நன்மை ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதும் நல்லதல்ல. இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரப்படி இந்த மாதம் உங்களுக்கு சுமாரான மாதமாக இருக்கும். இதுவரை உங்களை வாட்டிவந்த கடன் தொல்லைகள் தீரும். இதுவரை உங்களுக்கு தொல்லை ஏற்படுத்திவந்த எதிரிகளின் தொல்லை இப்போது குறையும். உங்களை வாட்டிவந்த நோய்கள் நீங்கி உடல்நலம் பெறுவீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகள் தீர்ந்துபோகும். இதுவரை மனதில் இருந்துவந்த துக்கங்களும் தொல்லைகளும் நீங்கிவிடும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள். த்ந்தை மேன்மை அடைவார். அவருக்கு உடல் நலம் பெறும். அவ்வப்போது செய்யும் காரியங்களில் தடைகளும் கால தாமதங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் விரோதங்களும் ஏற்படும். புத்திர புத்திரிகளின் போக்கு மனதில் கவலையை ஏற்படுத்தும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் தங்கள் பூர்வீகச் சொத்தைப் பிரிக்கவோ அல்லது விற்கவோ வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். குடும்பத்தாரின் தேவைகளை காலமறிந்து பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். அதன் காரணமாக குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடுகள் , சண்டை சச்சரவுகள் ஏற்படும். பெண்களால் அவமானம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். கணவன்-மனைவி உறவு எதிபார்த்த அளவு இருக்காது.

 

11. கும்பம்:-

 

குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. ராகுவின் சஞ்சாரத்தால் சில நன்மைகளும் கேதுவின் சஞ்சாரத்தால் சில சோதனைகளும் ஏற்படலாம். சனிபகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிப்பதும் நல்லதல்ல. இருப்பினும் குருவின் பார்வை கிடைப்பதால், சனி பகவானின் தீய பலன்களை அடக்கி வைக்கப்படும். இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரத்தால், புத்திரப்பேறு இல்லாத சிலருக்கு புத்திரப்பேறு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தாயார் மேன்மை அடைவார்கள். உறவினர்களால் நன்மை உண்டு. ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வாகனங்களையும், விவசாயிகள் புதிய கால்நடைகளையும் வாங்கும் யோகம் ஏற்படும். கேளிக்கை, விருந்து, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழும் வாய்ப்புகள் ஏற்படும். தந்தை மேன்மை அடைவார். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். சொல்வாக்கு, செல்வாக்கு, அந்தஸ்து,கௌரவம் உயரும். உங்களுடைய துணிச்சலான, புத்திசாலித்தனமான செயல்பாடுகளால், புகழும் கீர்த்தியும் கூடும். புத்திர புத்திரிகள் மேன்மை அடைவார்கள். அவர்களுக்கான சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது. எதிரிகளின் தொல்லை அவ்வப்போது இருந்துகொண்டு இருக்கும். மனதில் இனம்புரியாத கவலையும் பயமும் கவலையும் இருக்கும். இருப்பினும் கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

 

12. மீனம்:-

குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பது மிகவும் உன்னதமான நிலை. ராகு பகவானின் சஞ்சாரத்தால் தீய பலன்களும், கேது பகவானின் சஞ்சாரத்தால் நற்பலன்களும் விளையும். அதுபோல சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் கண்ட சனியாக உலா வருவதும் நல்லதல்ல. ஆனால், குருபகவான் இரண்டாமிடத்திலிருந்து நற்பலன்களைக் கொடுப்பதால், மற்ற கிரகங்களின் தீய பலன்கள் அடிபட்டுப் போய்விடும். இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரப்படி உங்களுக்கு இந்த மாதம் மனோபலம் மேலோங்கும். எந்த காரியத்தையும் , தைரியத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செய்து வெற்றியடைவீர்கள். முகத்தில் நல்ல பொலிவு ஏற்படும். அதிகாரமுள்ள பதவி சிலருக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் எற்படும். தொழில், வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். அதன் காரணமாக கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான சூழ்நிலை ஏற்படும். சொல்வாக்கு, செல்வாக்கு ,அந்தஸ்து, கௌரவம் கூடும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். சகல விதத்திலும் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் குடும்பத்தாருடன் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுவது நல்லது. ஏனெனில், வீண் விவாதங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கணவன்-மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எதிரிகளைப்பற்றிய அச்சம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால், சில நன்மைகள் கிடைக்கும். தோழர்கள் அபிவிருத்தி அடைவார்கள். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு எதிரிகளால் துக்கமும் மன பயமும் ஏற்படும்.

Advertisements