பேசா சன்னல்

பேசா சன்னல்


சன்னல்
பேசும் நேரங்களிலெல்லாம்
குழந்தை ஒன்று
மண்டியிட்டு ஏறிக்கொண்டிருக்கிறது
ரோஜா ஒன்று
அறையின் வாசம் பிடிக்கிறது
கட்டில் ஒன்று
நோயாளியை விரட்ட நினைக்கிறது
காதல் ஒன்று
களவு வேலைப் பார்க்கிறது
சுவர் ஒன்று
புரணிப் பேசிச் சிரிக்கிறது
சிகரெட் ஒன்று
சாம்பலை காரித் துப்புகிறது
நிலா ஒன்று
வீட்டிற்குள் வரத் துடிக்கிறது
மழை ஒன்று
நனைந்து தும்மல் போடுகிறது
சில நாள்
அதே சன்னல்
வாயடைத்தும் போகிறது.
-ப. ஜெயபால்

Advertisements