நீங்களும் படைப்பாளியாகலாம்… உங்களுக்குள்ளும் ஒரு எழுத்தாளர் ஒளிந்திருக்கலாம்…  கதை ,கட்டுரை, கவிதை இப்படி எதுவாக ஆயினும் உங்களுக்குள் புதைந்திருக்கும் கருத்துக்களுக்கு அவை வடிகாலாய் ஆவது மட்டுமல்லாமல் அது உங்களுக்கு ஒத்த கருத்துள்ள பல நண்பர்களையும் தேடித் தரும்…

மூன்றாம் கோணம் ஒரு தமிழ் வலைப் பத்திரிக்கை… ஜனரஞ்சக வலைப் பத்திரிக்கை.. இலக்கியம், சினிமா, சிறுகதை, ஆன்மிகம், கவிதை, அரசியல், கார்ட்டூன், சமையல், ஹெல்த், ஜோதிடம்.. இப்படி பல விஷயங்கள் அடங்கிய ஜனரஞ்சக வலைப் பத்திரிக்கை… அதில் நீங்களும் எழுத உங்கள் படைப்புக்களை moonramkonam@GMAIL.COM  என்ற முகவரிக்கு மெயில் செய்யுங்கள்…

எப்படி தமிழில் எழுதுவது ?

எழுத்து என்று வந்தவுடனே பெரும்பாலான படைப்பாளிகள் இணையத்தில் சந்திக்கும் முதல் சவால் எப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவது என்பதுதான்… அது மிகச்சுலபம்..

தமிழில் எழுத தமிழ் டைப்பிங்க் தெரிந்திருக்க வேண்டுமா? அவசியமேயில்லை….

1. நீங்கள் அழகி போன்ற தமிழ் எழுத்து சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்யலாம்…

அழகி டவுலோட் லிங்க்

1. அதன் பிறகு உங்கள் மெயிலை ஓபன் செய்யுங்கள்…

2. அதில் கம்போஸ் க்ளீக் செய்யுங்கள்.

3. அப்புறம் F10 பட்டனை அழுத்துங்கள்

4. இப்போது நீங்கள் என்று வர வேண்டும் என்றால் “neengal” என்று டைப் செய்யுங்கள்… இதற்கு ஃபோனடிக் டைபிங்க் என்று பெயர். அதாவது தமிழ் வார்த்தைகளின் ஓசையின்படி ஆங்கிலத்திலேயே டைப் செய்வதுதான் இது.

5. அவ்வளவுதான்… உங்கள் படைப்பு தயாராகிவிட்டது .

6. இப்போது அந்த மெயிலை moonramkonam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்புங்கள்…

2. Software இல்லாமலேயே  தமிழில் டைப் செய்ய இன்னொரு எளிய முறை…

இந்த சைட்டை ( http://www.tamil.sg)  இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் திறந்து கொள்ளுங்கள் ( இது  IEல்) மட்டும்தான் வேலை செய்யும்.

அதில் ஃபோனடிக் ( Phonetic) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் … பின் மேற்சொன்ன முறையிலேயே அங்கேயே அப்படியே ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே ஃபோனடிக் முறையில் டைப் செய்யுங்கள்.. டைப் செய்த பிறகு அதை காபி செய்து அதை உங்கள் மெயிலுக்குள் பேஸ்ட் செய்து பின் எங்களுக்கு மெயில் செய்யுங்கள் …

உங்கள் படைப்புகளை moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் !

சிறந்த படைப்புகள் பிரசுரிக்கப்படும்!

Advertisements