26.02.2010 ஆம் நாளிட்ட பிரன்ட்லைன் இதழில் பிரபாத் பட்நாயக் எழுதிய கட்டுரையின் சாரம்..பாகம்…1..

நம் நாட்டில் உள்ள பல தரப்பட்ட மொழி பேசும் ,பல சாதிகளாக ,இனங்களாக பிரிந்து கிடந்த மக்களை பாராளுமன்ற ஜனநாயக கோட்பாட்டின் கீழ் ஒன்று சேர்த்தது ஒரு மாபெரும் சாதனையாகும்.இந்த ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வந்த போதெல்லாம் மக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்த்துள்ளனர்.இந்த ஜனநாயக ஓட்டெடுப்புகளில் படித்த, வசதி படைத்த வர்கத்தவர்களைக் காட்டிலும் ஏழை எளிய மக்களே பெரும் பங்கெடுத்து வந்துள்ளனர்.

பல காலமாக நம் நாட்டில் நின்று நிலவும் பொருளாதார,சமூக ஏற்றத்தாழ்வு இன்று மிகவும் விரிவடைந்து எளிய மக்களின் எண்ணிக்கை பெருகி வந்துள்ளது .இதனால் ஜனநாயக உணர்வு மக்களிடையே சமீப காலமாய் வலுவிழந்து போய் உள்ளது.ஆனால் மக்கள் தாங்கள் எதனால் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளோம் என்பதை அறிந்து வர்க்க அடிப்படையில் ஒன்றிணைந்து போராடாமல் தங்கள் இனத்தையோ அல்லது மதத்தையோ,மாநிலங்களையோ சாதியையோ முன்னிறுத்தி இட ஒதுக்கீடு சலுகைகள் அல்லது பிற சமூகத்தவருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ,தனி மாநிலம் கோருவது அல்லது பள்ளிவாசலை இடிப்பது போன்றவைகளுக்காகப் போராடுகின்றனர்.

இந்திய சுதந்திரப் போரட்டங்களுக்குப் பின் 1970 வரை
பல்வேறு போராட்டங்கள் மக்களின் பொது நலனுக்காக நடந்துள்ளன.ஆனால் 1990 பின் மக்களின் நலங்களைப் பேண பெரும் அளவில் மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தவில்லை.புதிய பொருளாதாரக் கொள்கை விளைத்த காரணங்களினால் விவசாயம் சீர் குலைந்து 1,84,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.ஆனால் அரசின் கொள்கைகளுக்கு எதிராக எந்த ஒரு புதிய எழுச்சியும் ஏற்படவில்லை.இதற்குக் காரணம்….

நாளை தொடரும்….

…..மக்தூம்……