ஆகஸ்ட் 31 -1970 ஆம் வருடம் துல்கார்மைச் சேர்ந்த பாலஸ்தீனியப் பெற்றோருக்குப் பிறந்த ரனியா-அல்-யாசீன் ,

இன்று உலகின் பவர்ஃபுல் பெண்மணிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மிஷைல் ஒபாமாவுடன் ரனியா)


கைரோவின் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் பட்டப்படிப்பு முடித்து, அம்மான் ஆப்பிள் கணிணி நிறுவனத்தில் சிறிது காலம் பணிபுரிந்து வந்தார். ஜனவரி 1993 இல் ஜோர்டான் இளவரசரை ஒரு விழாவில் சந்தித்தார்.

காதலில் விழுந்த மன்னர் ஜூன் மாதம் 10ஆம் தேதி,அழகு மங்கை ரனியாவைக் கைப்பிடித்தார். தம்பதியினருக்கு…
1. பட்டத்து இளவரசர் ,ஹுசைன்,
2. இளவரசி இமான் ,
3. இள்வரசி சல்மா,
4. இளவரசர் ஹஷெம் என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர்.

ஜோர்டான் அரசியாக ரனியா பதவியேற்றுக் கொண்டது மார்ச் 1999 இல்.

வெறும் அழகுப்பாவையாக வலம் வருவதை வெறுக்கும் ரனியா, பல்வேறு நலத்திட்டங்களை நிறுவி தன் நாட்டு மக்களுக்கு மகத்தான சேவைகள் பலவும் செய்து வருகிறார். குறிப்பாகக் கல்வியில் பின் தங்கியுள்ள தன் நாட்டுப் பெண்குழந்தைகளுக்காக அவர் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் பாராட்டுக்குரியன. ஏப்ரல் 2008 இல் ரனியா , மதரஸாதி(my school)

என்ற திட்டத்தைத் துவக்கினார். அரசும் தனி நபர் கூட்டுமான இந்த நிறுவனத்தினால் ஜோர்டானின் 500 பள்ளிகள் பலன் பெற்றன.

2005 இல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கான விருதுகள் ராணி, ரனியாவின் பெயரால் வழங்கப்பட்டன. QUEEN RANIA AWARD FOR EXCELLENCE IN EDUCATION.

2007 இல் குழந்தைகளுக்கான அருங்காட்சியகம் ஒன்றைத் துவங்கினார் ரனியா. குழந்தைகள் மற்றும் அவர்கள் பெற்றோருக்கான வாழ்நாள் முழுமைக்கான கற்பிக்கும் பெட்டகமாக விளங்குகிறது அது. குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் விதமாக 1995 இல் ஜோர்டான் ரிவெர் ஃபௌண்டேஷனைத்(JRF) தொடங்கினார் ரனியா. பிறகு தி ஜோர்டான் ரிவர் சில்ட்ரன் ப்ரோகிராம் (JRCP) யை நிறுவினார்.

அரசியலுக்கும் கலாச்சார நம்பிக்கைகளையும் விட குழந்தைகளின் நலனைப் பெரிதாகக் கொள்வதே இந்த திட்டங்களின் முக்கிய குறிக்கோள். இவற்றோடு கூட” தி ராயல் ஹெல்த் சொசைட்டி”யின் அவைத் தலைவராகவும் இருக்கிறார் ரனியா.

மேலும் மிகுந்த அழகுணர்ச்சியும்
தற்கால ஊடகப் பரிவர்த்தனைகளில் ஈடுபாடும் கொண்ட ரனியாவின் ஃபேஸ் புக் பக்கம், ஜூலை 2010 இன் படி 254,900 (LIKES) பேரால் விரும்பப் பட்டிருக்கிறது!!! ட்விட்டரிலும் கலக்கும் ரனியாவின் யூசர் நேம் @Queen Rania என்பதாம்!!!

சந்தேகமில்லாமல் அழகு பாதி அறிவு பாதி சேர்த்து செய்த கலவை தான் ரனியா.

வாழ்த்துக்கள் ரனியா, வெல்லுங்கள் உலகை…
….ஷஹி…
(நன்றி விக்கிபீடியா, இணையம் )