ஓப்ரா வின்ஃப்ரே, ஜனவரி 24, 1954 இல் மிசிசிப்பியில் ஒரு வறுமையான சூழலில் பிறந்தார். உலகின் மிகுந்த செல்வாக்குள்ள பெண்ணாகக் கருதப்படுபம் ஓப்ரா, அமெரிக்க தொலைக்காட்சியில் “தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ “என்ற மிகப் பரபரப்பான டாக் ஷோ நடத்துபவர்.

மேலும் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், மனித நேயர் ,கொடை வள்ளல் மற்றும்  உலகின் மிகப் பவர்ஃபுல் பெண்களில் ஒருவர்.

அவர் பெயரிலேயே நடத்தப்படும் டாக் ஷோவான தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ ,பல விருதுகளைப் பெற்ற உலக தொலைகாட்சி டாக் ஷோக்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பது. அவருடைய இளமைக்காலம் கொடுமையானது.

ஒன்பதே வயதில் பாலியல் வன்முறைக்கு பலியானார், பதின் பருவத்தில் ஒரு குழந்தைக்குத் தாயாகும் துரதிர்ஷ்டமும் நேர்ந்தது. சிசு இறந்து போக, பள்ளிப் பருவதிலேயே வானொலி நிலையத்தில் பணிக்கு சேர்ந்தார் ஓப்ரா.

19 தே வயதில் , சிகாகோவில் மோசமாக நடத்தப்படுக்குக் கொண்டிருந்த ஒரு டாக் ஷோவை, தான் நடத்தி, அதனை முதல் இடத்துக்குக் கொண்டு வந்தார். அதிலிருந்து திரும்பிப் பார்க்க நேரமில்லை ஓப்ராவுக்கு! வெற்றி மேல் வெற்றி! சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கினார் ஓப்ரா. ஸ்டீவென் ஸ்பீல்பெர்கின் தி பர்பிள் என்ற படத்தில் சோஃபியா வாக நடித்தார், பிலவட் என்ற படத்தை இயக்கி நடத்தினார். சார்லோட்டஸ் வெப் ,பீ மூவி, தி ப்ரின்செஸ் அண்ட் தி ஃப்ராக் மேலும் பிபிசி யின் நேசர் புரோகிராம் லைஃப் ஃபார் டிஸ்கவரி என்ற நிகழ்ச்சிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

அவர் நடத்தும் பத்திரிக்கைகள் ஓ, தி ஓப்ரா மேகசின் மற்றும் ஓ அட் ஹோம். ஓப்ரா.காம்.வெப்சைட் (oprah.com.website) என்ற வலைமனை நடத்தும் ஓப்ராவின் கம்பெனி அவருடைய அறநிலையங்களுக்கு

இவற்றின் மூலம் நிதி சேர்க்கிறது. சி.என்.என் (CNN)  ஓப்ராவை” arguably the world’s most powerful woman” “சர்ச்சைகளுக்கு உட்பட்டு உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணி ” என்கின்றது. டைம்.காம் (time.com) “arguably the most influential woman in the world” சர்ச்சைகளுக்கு உட்பட்டு உலகின் செல்வாக்கான பெண்மணி என்கிறது.

பாரக் ஒபாமா “இவரே உலகின் மிகுந்த செல்வாக்கான பெண்ணாக இருக்கலாம் ” may be the most influential woman in the country” என்கிறார்.

ஓப்ராவின் மிகப் பேசப்பட்ட  வாசகங்கள்

I trust that everything happens for a reason, even when we are not wise enough to see it. “நடப்பவை எல்லாமே காரண காரியத்தோடு தான் நடக்கின்றன நமக்கு அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லை அவ்வளவே”

living in the moment brings you a sense of reverance for all of life’s blessings.” ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்தால் வாழ்வின் மகத்துவம் நன்கு புரியும்”

the big secret of life is no big secret. whatever your goal you can get there if you are willing to work. “வாழ்வின் வெற்றி ரகசியம் ஒன்றும் பெரிய ரகசியம் அல்ல!” அயராமல் உழைக்கத்தயாரென்றால் எந்த உயரத்தையும் எட்டலாம்” என்பது தான் ஒரு வறுமையான கருப்பினக் குடும்பத்தில் பிறந்து, மிகத் துயரமான இளமைப் பருவத்தைக் கடந்து உலகின் பவர்ஃபுல் பெண்ணாக உயர்ந்திருக்கும் ஓப்ராவின் வெற்றி ரகசியம்.

..ஷஹி..

படங்கள் இணையத்திலிருந்து.